தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியாவில் 10,000 தொடக்கப் பள்ளி ஊழியர்களுக்கு மனச்சோர்வு

1 mins read
eb969bf4-d56c-4670-abc6-19ff88adba65
கோப்புப் படம்: - இணையம்

சோல்: தென்கொரியாவில் மனச்சோர்வுக்கு ஆளாகும் தொடக்கப் பள்ளி ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் 9,468 தொடக்கப் பள்ளி ஊழியர்கள் மனச்சோர்வுக்கு சிகிச்சை பெற்றனர் என்று கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 28) அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

தென்கொரியாவின் தேசிய சுகாதாரக் காப்புறுதிச் சேவைப் புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவை, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான கொரிய ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதிக்கும் ஜின் சுன்-மி என்பவரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

2018ல் ஒவ்வோர் 1,000 பேருக்கும் 16.4 தொடக்கப் பள்ளி ஊழியர்கள் மனச்சோர்வுக்கு சிகிச்சை பெற்றனர். 2023ல் அந்த எண்ணிக்கை 37.2க்கு அதிகரித்தது புள்ளிவிவரங்களில் தெரியவந்தது.

சென்ற ஆண்டு 7,335 தொடக்கப் பள்ளி ஊழியர்கள் மனப்பதற்றத்துக்கு (anxiety disorder) சிகிச்சை பெற்றனர். 2018ல் ஒவ்வோர் 1,000 ஊழியர்களில் ஒருவர் மனப்பதற்றத்துக்கு சிகிச்சை பெற்றனர். சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை 28.8க்குக் கூடியது.

தென்கொரியாவில் பொதுவாக எல்லா நிலைக் கல்வி நிலையங்களிலும் மனச்சோர்வு, மனப்பதற்றம் ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்