தண்ணீர் பற்றாக்குறையால் பிலிப்பீன்சில் 11 மில்லியன் குடும்பங்கள் பாதிப்பு

தண்ணீர் பற்றாக்குறையால் பிலிப்பீன்சில் 11 மில்லியன் குடும்பங்கள் பாதிப்பு

1 mins read
cb442aa8-8378-451c-93d9-73a7f4e1472d
படம்: EPA-EFE -

பிலிப்பீன்சில் கிட்டத்தட்ட 11 மில்லியன் குடும்பங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் பெர்டினானட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.

கோடை காலம் நெருங்கி வருவதால் சூழ்நிலை மேலும் மோசமாகக்கூடும் என்று அங்கு அச்சம் நிலவுகிறது.

இப்பிரச்சினையை தொழில்நுட்ப உதவிகளைக் கொண்டு சரிசெய்ய வேண்டும் என்றும் மார்கோஸ் ஜூனியர் கூறியுள்ளார்.

தண்ணீர் வளங்களை சரியாகப் பயன்படுத்தவும் தண்ணீர் சேமிப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அண்மை காலமாக பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் சுற்றுவட்டாரங்கள் உட்பட பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் அரசாங்கம் தண்ணீர் குழாய்களையும் தண்ணீர் சேமிப்பு நிலையங்களையும் சரியாக பராமரிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்