தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவான் எல்லையில் 14 சீன போர்க் கப்பல்கள்

1 mins read
b3985cbe-1afa-4896-878e-dd2d5c6d0ddd
இவ்வாண்டு மட்டும் சீனாவுக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் தைவான் அருகே இரண்டு முறை போர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

தைபே: தங்களது எல்லையை சுற்றி நிற்கும் சீனாவின் போர்க் கப்பல்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தைவானின் தற்காப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை குறைகூறியுள்ளது.

தைவானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக சீனா நடவடிக்கை மேற்கொள்வதாக அது தெரிவித்தது.

தைவான் தமக்கு சொந்தமானது என்று சீனா பல காலமாக கூறிவருகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே அது தைவான் எல்லையில் அடிக்கடி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.

2024ஆம் ஆண்டில் மட்டும் சீனாவுக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் தைவான் அருகே இரண்டு முறை போர் பயிற்சிகளில் ஈடுபட்டன.

தைவான் எல்லையில் சனிக்கிழமை 8 சீன போர்க்கப்பல்கள் இருந்தன ஆனால் இப்போது 14 போர்க் கப்பல்கள் நிற்பதாக தைவான் கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்