சும்போன்: நாய்க்குட்டியைக் கடலில் வீசிய மியன்மார் நாட்டவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் 15 நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்தத் தகவலை தாய்லாந்துக் கண்காணிப்புக் குழு அறநிறுவனம் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 10) வெளியிட்டது.
தி ஹா ஓங் என்ற அந்த மியன்மார் ஆடவரின் விசாவைத் தாய்லாந்து குடிநுழைவு ஆணையம் ரத்து செய்தது.
அவரை மியன்மாருக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தி ஹா ஓங், நாய்க்குட்டியைக் கடலில் வீசுவதைக் காட்டும் காணொளி பிப்ரவரி 7ஆம் தேதியன்று இணையத்தில் வலம் வந்தது.
கடலில் வீசப்பட்ட நாய்க்குட்டி தத்தளித்துக்கொண்டே கரை திரும்பியபோது அதை மீண்டும் அவர் கடலில் வீசினார்.
இச்சம்பவம் 2023ஆம் ஆண்டிறுதியில் நிகழ்ந்தது.
விலங்கு வதை தொடர்பாக அந்த ஆடவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இணையக் குற்ற புலன்விசாரணைப் பிரிவின் உதவியோடு அந்த 19 வயது ஆடவர் அடையாளம் காணப்பட்டார்.
பிப்ரவரி 8ஆம் தேதியன்று காவல்துறையிடம் தி ஹா ஓங் சரணடைந்தார்.
நாய்க்குட்டியைச் சுத்தம் செய்யவே அதைக் கடலில் வீசியதாக அவர் கூறினார்.

