இந்தோனீசிய நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 15 பேர் மரணம்: பேரிடர் அமைப்பு

இந்தோனீசிய நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 15 பேர் மரணம்: பேரிடர் அமைப்பு

1 mins read
bdea3fe9-fb38-439b-90e0-dfa925ec91c7
எஞ்சியிருக்கும் பாலத்தைப் பயன்படுத்தி மாது ஒருவர் ஆற்றைக் கடந்துசெல்கிறார். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்தியப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் குறைந்தது 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.

பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, சாலைகளும் சேதமுற்றதாக அந்நாட்டின் பேரிடர் அமைப்பு மே 4ஆம் தேதி கூறியது.

இந்தோனீசியாவில் மழைக்காலத்தின்போது நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம்.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒரு மணி அளவில் தென் சுலாவேசியில் உள்ள ‘லுவு’ வட்டாரத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக இந்தோனீசியப் பேரிடர் மீட்பு அமைப்பின் பேச்சாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.

“தென் சுலாவேசி மாநிலத்தில் உள்ள ‘லுவு’ வட்டாரத்தில் நிலச்சரிவுகளாலும் வெள்ளத்தாலும் மொத்தம் 14 குடியிருப்பாளர்கள் உயிரிழந்தனர்,” என்றார் அவர்.

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மோசமாகச் சேதமுற்றதாகவும், 42 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. நான்கு சாலைகளும் ஒரு மேம்பாலமும் சேதமுற்றன.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிவாசல்களுக்கோ உறவினர்களின் வீடுகளுக்கோ இடம் மாற்றப்பட்டனர். 1,300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்