தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகழுரை, 16 வகை உணவு என எலன் மஸ்கை உபசரித்த சீனா

1 mins read
9cd40397-ff8f-488e-a409-b0c32977e4fb
படம்: ராய்ட்டர்ஸ் -

உலக செல்வந்தர்களில் ஒருவராகவும் தொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறக்கும் நபராகவும் திகழும் எலன் மஸ்க் தற்போது சீனாவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு சீன அரசாங்கம் 16 வகை உணவு படைத்து அசத்தியுள்ளது. அறிவியல் முன்னோடி, சகோதரர் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

சீனாவிற்கு செவ்வாய்க்கிழமை சென்ற மஸ்க் அந்நாட்டின் வெளியுறவு, வர்த்தகம், தொழில் அமைச்சர்களை சந்தித்துப்பேசியுள்ளார்.

அவர்களின் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

மஸ்கைப் போலவே அண்மையில் சில அமெரிக்க தொழில் அதிபர்கள் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஜேபி மார்கனின் ஜேமி டைமன், ஸ்டார்பக்ஸின் லக்ஸ்மன் நரசிம்மன் ஆகியோர் சீனாவிற்கு சென்றிருந்தனர்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்து வரும் காரசாரமான வாக்குவாதங்களுக்கு இடையிலும் மஸ்கின் புகழ் சீனாவில் குறையவில்லை.

சீன சமூக ஊடகங்களிலும் மஸ்கை அந்நாட்டு இணையவாசிகள் புகழ்ந்துதள்ளியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்