துபாய் குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 16 பேர் மரணம்

துபாய் குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 16 பேர் மரணம்

1 mins read
4456e1f0-904d-4790-b952-ea1290a58fd7
படம்: ராய்ட்டர்ஸ் -

துபாயில் உள்ள ஒரு கட்டடக் குடியிருப்பில் தீச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அதில் 16 பேர் மாண்டதாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பவம் அல்-ராஸ் வட்டாரத்தில் உள்ள ஒரு ஐந்து மாடி குடியிருப்பு கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தீ உடனே அணைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

துபாயின் பழமைவாய்ந்த பகுதிகளில் அல்-ராஸ் வட்டாரமும் ஒன்று. அது வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையே மிகவும் பிரபலமான வட்டாரம்.

கட்டடத்தில் பாதுகாப்பு விதிமுறைகளும் நடவடிக்கைகளும் பின்பற்றப்படாததால் தான் தீச்சம்பவம் ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்