டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் 17 பேர் காயம்

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் 17 பேர் காயம்

1 mins read
ரயிலில் பயணம் செய்த யாரும் உள்ளே சிக்கிக் கொள்ளவில்லை
b8185912-1bbd-4573-9c47-64b02df0f210
‘ஹில்லரொட்’, ‘காகரெப்’ ஆகிய இரு நகரங்களின் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை (ஏப்ரல் 23) விபத்து நடந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கோப்பன்ஹெகன்: டென்மார்க்கில் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன.

கோப்பன்ஹேகனுக்கு வடக்கே, ‘ஹில்லெரோட்’ (Hillerod), ‘காகெரப்’ (Kagerup) நகரங்களை இணைக்கும் ரயில் பாதையில் அந்தச் சம்பவம் நடந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

“இரு உள்ளூர் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன,” என்று ‘கிரேட்டர் கோப்பன்ஹேகன்’ தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“பயணிகளுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அனைவரும் ரயில்களில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். யாரும் உள்ளே சிக்கிக் கொள்ளவில்லை. மீட்புப் பணிகளுக்காகப் பெருமளவிலான வளங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன,” என்றார் அவர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவ வாகனங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று தீயணைப்புத் துறை தெரிவித்தது.

டென்மார்க்கின் ‘டிஆர்’ஊடகம், முன்பாகங்களில் சேதமடைந்த மஞ்சள், சாம்பல் நிற ரயில் வண்டிகளின் புகைப்படங்களை வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்
டென்மார்க்ரயில்மோதல்காயம்பயணிகள்பொதுப் போக்குவரத்து