சீனாவில் உள்ள 180,000 பிஎம்டபிள்யூ கார்கள் சந்தையிலிருந்து மீட்பு

சீனாவில் உள்ள 180,000 பிஎம்டபிள்யூ கார்கள் சந்தையிலிருந்து மீட்பு

1 mins read
aad4e7af-2b90-4ff8-a848-e8d2f9c3d177
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், செவன் சீரிஸ், எம்5 கார்கள் மீட்டுக்கொள்ளப்படுகின்றன. - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனாவில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் 180,000 கார்களைச் சந்தையிலிருந்து மீட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

காரில் உள்ள குளிரூட்டி வசதியின் கம்பி இணைப்பில் உள்ள கோளாற்றால் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதாக நிறுவனம் கூறியது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதிக்கும் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 133,849 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார்களை நிறுவனம் மீட்டுக்கொள்கிறது.

இறக்குமதி செய்யப்பட்ட 45,678 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், செவன் சீரிஸ், எம்5 கார்களும் மீட்டுக்கொள்ளப்படுகின்றன. அவை 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டவை.

பிஎம்டபிள்யூ நிறுவனம், மீட்டுக்கொண்ட வாகனங்களில் குளிரூட்டிச் சாதனத்தின் கம்பிகளைச் சரிபார்க்கும் என்று தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்