ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் மதுபானத்துக்கு 200% வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அலுமினியம், எஃகு ஆகியவற்றுக்குத் திரு டிரம்ப் வரி விதிப்பதாக சொன்னதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க விஸ்கிக்கு 50 விழுக்காடு வரி விதித்தது.
அதற்குப் பதிலடியாகத் திரு டிரம்ப் ஐரோப்பிய மதுபானத்துக்கு வரி விதிப்பதாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் விஸ்கிக்கு விதிக்கப்பட்ட கடுமையான வரியை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக அகற்ற வேண்டும் என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.
அதுபோன்ற வரி காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் சாடினார்.
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய முயற்சிகள் நடைபெறுவதாக ஒன்றியப் பேச்சாளர் சொன்னார்.
ஐரோப்பிய ஒன்றியம் ஆண்டுதோறும் 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான மதுபானத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

