2020 தேர்தல் முடிவுகள்: விசாரணைக் குழுக்களை அமைக்க டிரம்ப் திட்டம்

1 mins read
39061000-34ee-46eb-aeb2-68438b128b5f
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று அமெரிக்காவின் அடுத்த அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்க இருக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் டோனல்ட் டிரம்ப் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.

ஆனால் அந்தத் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததாகவும் அதன் காரணமாகவே தாம் தோற்றதாகவும் டிரம்ப் நீண்டகாலமாகவே கூறி வருகிறார்.

இந்நிலையில், இவ்வாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று அவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பதவி ஏற்க இருக்கிறார்.

2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளில் மோசடி நிகழ்ந்ததா என்பதை கண்டறிய விசாரணைக் குழுக்களை அமைப்பது குறித்து அவர் திட்டமிட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் நவம்பர் 23ஆம் தேதியன்று தெரிவித்தது.

டிரம்ப்புக்கு நெருக்கமான இருவர் இத்தகவலை வெளியிட்டதாக அந்த நாளிதழ் கூறியது.

குறிப்புச் சொற்கள்