தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிள்ளான் பள்ளத்தாக்கில் 21 சொகுசு கார்கள் பறிமுதல்

1 mins read
அவற்றில் சில, மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு வரப் பயன்படுத்தப்பட்டவை
de081a01-c92f-439a-be09-7dde7b1f360e
செப்டம்பர் 2ஆம் தேதிக்கும் 6ஆம் தேதிக்கும் இடையே, அமலாக்க அதிகாரிகள் 35 வாகனங்களைச் சோதித்தனர். அவற்றில் 21 வாகனங்கள் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: சாவ்பாவ்

ஷா ஆலம்: மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை(JPJ) , சுற்றுப்பயணிகளுக்குச் சட்டவிரோத டாக்சி சேவை வழங்கிய 21 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை சொகுசு வாகனங்கள் என்று கூறப்பட்டது.

இத்தகைய சேவை மூலம் சுற்றுப்பயணிகளிடம் அதிகத் தொகை வசூலித்து ‘கொள்ளை அடிப்பதாகப்’ புகார்கள் பெறப்பட்டதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ‘ஜேபிஜே’ தலைமை இயக்குநர் ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.

கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் செல்ல ஒரு பயணி 993 ரிங்கிட் (S$299) செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார். அதற்கு வழக்கமாக 300 ரிங்கிட் செலுத்தினால் போதும் என்பதை அவர் சுட்டினார்.

நாட்டின் பெருமையைக் குலைப்பதால் இத்தகைய சட்டவிரோதச் செயல்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக செப்டம்பர் 12ஆம் தேதி சிலாங்கூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் புகழ்பெற்ற சுற்றுப்பயணத் தலங்களிலும் முன்னணி ஹோட்டல்களிலும் ‘ஜேபிஜே’ இத்தகைய அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்வது இதுவே முதல்முறை என்றார் திரு ஏடி ஃபட்லி.

செப்டம்பர் 2ஆம் தேதிக்கும் 6ஆம் தேதிக்கும் இடையே, அமலாக்க அதிகாரிகள் 35 வாகனங்களைச் சோதித்தனர். அவற்றில் 21 வாகனங்கள் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டன.

“இதையடுத்து வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு மொத்தம் 21 அழைப்பாணைகள் விடுக்கப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் 1,000 ரிங்கிட் முதல் 10,000 ரிங்கிட் வரையிலான அபராதத்தைச் செலுத்தவேண்டும். அல்லது ஈராண்டுச் சிறைத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும்,” என்றார் திரு ஏடி ஃபட்லி.

குறிப்புச் சொற்கள்