ஜோகூரில் 25 இடங்களில் திடீர் வெள்ளம்

ஜோகூரில் 25 இடங்களில் திடீர் வெள்ளம்

1 mins read
283a8e8b-cffa-4193-8e0e-33307343cac9
இரண்டு மணி நேரம் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் கம்போங் முகமது அமீனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே இடுப்பளவு நீரில் நிற்கும் ஆடவர். - படம்: த ஸ்டார்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

ஜோகூர் பாரு: டிசம்பர் 6ஆம் தேதி இரண்டு மணி நேரம் பெய்த இடியுடன்கூடிய கனமழையை அடுத்து ஜோகூரில் 25 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

குடியிருப்பாளர்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டதாகக் கூறப்பட்டது.

அவர்களில் சிலர், தங்கள் நண்பர்கள் உதவியுடன் கதவை உடைத்தும் கூரையைப் பிரித்தும் வீட்டை விட்டு வெளியே வந்ததாகக் கூறினர்.

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட வாகனங்களை நகர்த்த முடியாமல் சிலர் அவதியுற்றனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்புப் படையினர் மீட்புப் படகுகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.

கம்போங் முகமது அமினில் 46 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் பள்ளி மாணவர்கள் 38 பேரும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் முதியவரும் அடங்குவர்.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சில வாகனங்களும் திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்