தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பனிப்புயலால் 29 சிங்கப்பூர்-தென்கொரியா விமானச் சேவைகள் பாதிப்பு

2 mins read
e1f71023-d732-4e73-8b51-3d88439d0e85
அரை நூற்றாண்டுக்கு மேல் காணப்படாத பனிப்பொழிவை சோல் எதிர்நோக்குகிறது. - படம்: இபிஏ
multi-img1 of 2

சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான குறைந்தது 29 விமானச் சேவைகள் புதன்கிழமையன்று (நவம்பர் 27) ரத்தாயின அல்லது தாமதமடைந்தன.

அந்த 29 விமானச் சேவைகளில் மூன்று ரத்தாயின. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் நவம்பர் மாதம் காணப்படாத பனிப்பொழிவை தென்கொரியா எதிர்கொள்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

தனது விமானச் சேவைகளில் குறைந்தது ஐந்து, ஒன்றிலிருந்து ஒன்பது மணிநேரம் வரை தாமதமடைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பதிலளித்தது. புதன்கிழமையன்று தென்கொரியத் தலைநகர் சோலிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட அந்நிறுவனத்தின் SQ601, SQ605, SQ607, SQ611 சேவைகளும் வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) சோலிலிருந்து சிங்கப்பூருக்கு வரவிருந்த SQ607 உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட சேவைகளாகும்.

அதேவேளை, சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான தங்களின் விமானச் சேவைகள் தொடர்வதாக ஸ்கூட் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வானிலை நிலவரத்தைக் கண்காணித்து அதற்கு ஏற்றவாறு தங்களின் விமானச் சேவைகள் மாற்றியமைக்கப்படக்கூடும் என்று ஸ்கூட் குறிப்பிட்டது.

சோலின் முக்கிய விமான நிலையமான இன்சியோன்தான் (Incheon) ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு விமானச் சேவைகள் சராசரியாக இரண்டு மணிநேரம் பாதிக்கப்பட்டன. வியாழக்கிழமையன்று இன்சியோன் விமான நிலையத்தில் 14 விழுக்காட்டு விமானச் சேவைகள் தாமதமடைந்தன, 15 விழுக்காட்டுச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

விமானச் சேவைகளைக் கண்காணிக்க உதவும் ஃபிலைட்ரேடார்24 (Flightradar24) இணையத்தளத்தில் அந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை ஏழு மணிக்குள் சோலில் 16.5 சென்டிமீட்டர் உயரத்துக்குப் பனி பொழிந்ததாக தென்கொரிய வானிலை நிர்வாகம் தெரிவித்தது.

அந்நகரில் 1972ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதியன்று 12.4 சென்டிமீட்டர் உயரத்துக்குப் பனி பொழிந்தது. அதுவே இதற்கு முன்பு சோல் எதிர்கொண்ட ஆக அதிகப் பனிப்பொழிவாகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்