உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளை 2030ஆம் ஆண்டில் மூன்று நாடுகள் ஏற்று நடத்துவதற்கு அதன் ஏற்பாட்டாளர்களான ஃபிப்ஃபா அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி நடப்பு வெற்றியாளர்களான ஸ்பெயின், போர்ச்சுகல், மொரோக்கோ ஆகிய நாடுகள் அப்போட்டிகளை இணைந்து நடத்தும். உருகுவே, பாராகுவே, அர்ஜென்டினா ஆகிய மூன்று நாடுகளில் தலா ஒரு முதல் சுற்று ஆட்டம் நடக்கும்.
கடந்த 2018ஆம் ஆண்டில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்சேஸ், போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்தா இருவரும் இணைந்து அப்போட்டிகளை நடத்துவதற்கான முதல் படியை முன்னெடுத்து வைத்தனர். அவர்களின் கூட்டு அறிவிப்பு வெளியிடப்பட்ட சில நாள்களில் அவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அங்கமான மோரொக்கோவுக்கும் அழைப்பு விடுத்தனர்.
இணை ஏற்பாட்டுக்கான முன்மொழிவை ஸ்பெயினும் போர்ச்சுகலும் 2020ஆம் ஆண்டில் ஃபிப்ஃபா அமைப்பிடம் வழங்கின. மோரோக்கோ இணை ஏற்பாட்டுக்கான அதன் விருப்பத்தை 2023ஆம் ஆண்டில் வைத்தது.
அதே ஆண்டில் உருகுவேயில் முதல் உலகக்கிண்ணப் போட்டிகள் நடந்த 1930 ஆண்டின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு முடிவும் எடுக்கப்பட்டது. அதன்படி உருகுவே, பராகுவே, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் முதல்சுற்று ஆட்டங்கள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
