மாண்ட்ரீல்: கனடாவின் ஆல்பர்ட்டா மாநிலத் தலைநகரான எட்மண்டனில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூவர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை திங்கட்கிழமை தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்றும் அவர்கள் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான வகையில் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை கூறியது.
இந்தத் துப்பாக்கிச்சூடு முன்விரோதம் காரணமாக நடந்தது என்றும் இது தனியொருவர்மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் காவல்துறை சொன்னது.
மேலும், ஆபத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், துப்பாக்கிச்சூட்டை அடுத்து விதித்த ஊரடங்கு உத்தரவைத் திரும்பப்பெறப் போவதாக அது தெரிவித்தது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் விவரங்களைக் காவல்துறை வெளியிடவில்லை.