இந்தோனீசியத் தொழிற்சாலை தீ விபத்தில் 39 பேரைக் காணவில்லை

இந்தோனீசியத் தொழிற்சாலை தீ விபத்தில் 39 பேரைக் காணவில்லை

படம்: த இந்து

22 Nov 2026 - 1:26 pm

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் மேற்குப் பகுதியில் உள்ள உணவு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேரை இன்னும் காணவில்லை என்று மீட்புப் பணியாளர்களின் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) தெரிவித்துள்ளார்.

ஜகார்த்தாவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் செராங் வட்டாரத்தில் உள்ள ஃபொனுசா அகொங் முலியா எனப்படும் அத்தொழிற்சாலையில் சனிக்கிழமை மதியம் தீ பிடித்ததாக உள்ளுர் தேடுடல், மீட்பு அமைப்பு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

அன்றிரவு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காட்சியில், தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுவதைக் காணமுடிந்தது. அங்கு சர்க்கரை உட்பட தின்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்கிறது எனவும் நால்வர் காயமுற்றனர் எனவும் மீட்புப் பணியாளர் ரிஸ்கி டிவியான்டோ தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை வரை தீ தொடர்ந்து எரிந்து வருவதாகவும் அதனால் காணாமல் போனோரைத் தேடும் பணி குழப்பமடைந்துள்ளதாகவும் அவர் விவரித்தார்.

தேடுதல் மீட்புப் படையின் அனைத்து அங்கங்களும் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டுவரும் அதே வேளையில், அதிகாரிகளின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

தீ ஏற்பட்டதன் காரணத்தை அறிய விசாரணை தொடர்கிறது என்று உள்ளூர் பேரிடர் நிர்வாக அமைப்பு அதன் இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்