திபெத்தை உலுக்கிய 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: இதுவரை 18 பேர் மரணம்

திபெத்தை உலுக்கிய 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: இதுவரை 18 பேர் மரணம்

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு

23 Oct 2026 - 12:58 pm

1 mins read

திபெத்: சீனாவின் திபெத் பகுதியில் வியாழக்கிழமை (அக்டோபர் 22) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 32க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 11பேர் படுகாயமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.

திபெத்தின் நாக்கூ பகுதியில் இருந்து 191 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள வட்டாரத்தை சிங்கப்பூர் நேரப்படி அன்றைய தினம் இரவு 10.33 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது. அது ரிக்டர் அளவில் 7.0 என்று பதிவுசெய்யப்பட்டது.

அவ்வட்டாரத்தில் இயங்கும் அவசர உதவி தளபத்தியத்தைக் குறிப்பிட்டு மரண எண்ணிக்கையையும் காயமடைந்தோர் குறித்தும் மத்திய சீனத் தொலைக்காட்சி நிறுவனம் உறுதிப்படுத்தியது.

ஆரம்பகட்ட மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 339 வீடுகள் இடிந்துவிழுந்துள்ளன. உள்ளூர் ஆட்சியினர் 300 காவல்துறையினரை தொடரும் மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

நிலநடுக்கத்துக்குப் பிறகு, 5.2 ரிக்டர் அளவில் நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

சீனாவின் அவசரநிலை நிர்வாக அமைச்சு, தேசிய அளவில் 4ஆம் நிலைக்கான எச்சரிக்கை நடவடிக்கையை செயல்படுத்தியிருப்பதாக ஷின்ஹுவா அரசாங்க ஊடகம் தெரிவித்தது. அதன்படி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவிக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதி, ஏறத்தாழ பூமியில் இருந்து 4,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு குறைந்த அளவிலான மக்களே வாழ்கின்றனர் என்று அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்