தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் கடுமையாக ஆட்டங்கண்ட ஸ்கூட் விமானம்; ஏழு பேர் காயம்

2 mins read
49566208-cd36-4107-ad6b-d5363bb73b84
காயம் அடைந்த ஏழு பேரில் ஒருவர் மருத்தவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். - படம்: இணையம்

சிங்கப்பூரிலிருந்து சீனாவின் குவாங்சோ நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்கூட் விமானம் செப்டம்பர் 6ஆம் தேதி காலை, நடுவானில் கடுமையாக ஆட்டங்கண்டது.

இதில் ஏழு பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குவாங்சோ நகரை நெருங்கியபோது ஸ்கூட் டிஆர் 100 விமானம் ஆட்டங்கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், அது பத்திரமாக தரையிறங்கியது.

“குவோங்சோ நகரை அடைந்ததும் நான்கு பயணிகளுக்கும் மூன்று விமானச் சிப்பந்திகளுக்கும் உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. பயணி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது,” என்று ஸ்கூட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

தனது பயணிகள் மற்றும் விமானச் சிப்பந்திகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர்களுக்குத் தேவையான ஆதரவு, உதவி அனைத்தும் வழங்கப்படும் என்றும் ஸ்கூட் கூறியது.

சம்பவம் நிகழ்ந்தபோது விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து அது தகவல் வெளியிடவில்லை.

விமானம் 35,0000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அது கடுமையாக ஆட்டங்கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, அது திடீரென்று 25 அடி இறங்கியது.

விமானம் முதலில் 500 knots வேகத்தில் சென்றுகொண்டிருந்ததாகவும் கடுமையாக ஆட்டங்கண்ட பிறகு அதன் வேகம் 262 knots ஆகக் குறைந்ததாகவும் தரவுகள் காட்டுவதாக அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, செப்டம்பர் 5ஆம் தேதியன்று இஸ்தான்புல் நகரிலிருந்து தைவானியத் தலைநகர் தைப்பேவுக்குப் பறந்துகொண்டிருந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் கடுமையாக ஆட்டங்கண்டது.

இந்தத் தகவலைப் பிரிட்டிஷ் நாளிதழான தி மிரர் வெளியிட்டது.

17 விமானச் சிப்பந்திகளில் இருவரும் 214 பயணிகளில் ஐவரும் காயமடைந்தனர்.

இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று மெக்சிகோவிலிருந்து புறப்பட்டுச் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் கடுமையாக ஆட்டங்கண்டதை அடுத்து, அது அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரில் தரையிறக்கப்பட்டது.

அந்த விமானம் சிக்காகோ நகருக்குச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்