அலிபாபா நிறுவனம் ‘ஏஐ’ல் $70 பில்லியன் முதலீடு

அலிபாபா நிறுவனம் ‘ஏஐ’ல் $70 பில்லியன் முதலீடு

1 mins read
8971e090-751a-4c0a-8729-0cd7e3ee1d65
சீனாவின் மாபெரும் இணைய வணிக நிறுவனமான அலிபாபா நிறுவனம் உள்ளது - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனாவின் மாபெரும் இணைய வணிக நிறுவனமான அலிபாபா, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்புகளுக்கு 70 பில்லியன் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்டங்கட்டமாக அந்த முதலீட்டைச் செய்யப்போவதாக அலிபாபா திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தெரிவித்தது.

முதலீட்டு நிதி மூலம் தரவு நிலையங்கள் உள்ளிட்டவை கட்டப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அலிபாபா செய்து வந்த முதலீட்டைவிடத் தற்போது அறிவிக்கப்பட்ட முதலீடு நிதி அதிகமானது.

தற்போது உலக அளவில் செயற்கை நுண்ணறிவுக்கான தேவை அதிகரித்து வருவதால் அதில் தனது கவனத்தை அலிபாபா திருப்பியுள்ளது.

அலிபாபாவிற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையே 2020ஆம் ஆண்டு முதல் பூசல் ஏற்பட்டது. அதன் பின்னர் அதன் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இனிவரும் நாள்களில் இணைய வணிகம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக அலிபாபா தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்