விபரீதத்தில் முடிந்த சாகசச் செயல்: ஓட்டுநர் காயம்

விபரீதத்தில் முடிந்த சாகசச் செயல்: ஓட்டுநர் காயம்

1 mins read
12ae692c-31e1-45f5-a37a-8d9a185e4954
மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் தனது பிடியை இழந்து கீழே விழுந்தார். அவரது மோட்டார்சைக்கிள் தீப்பிடித்துக்கொண்டது.  - படம்: யூடியூப்
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்ற கனல்தெறிக்கும் மோட்டார்சைக்கிள் சாகசக் காட்சி ஒன்றில் சாகசச்செயல் வீரர் ஒருவர் காயமடைந்தார்.

சீனாவின் ஷான்சி மாநிலத்தில், வூஜின்ஷான் வனப் பூங்காவில் உள்ள ‘ஹேப்பி வேலி’ கேளிக்கைப் பூங்காவில் மோட்டார்சைக்கிள்களைக் வட்ட வடிவிலான கூண்டு ஒன்றில் மேலும் கீழும் ஓட்டும் செயல் வழக்கமாக நடைபெறுவதுண்டு.

அந்தப் பிரபலமான சாகசச் செயலில், எஃகுக் கம்பியால் செய்யப்பட்ட கூண்டு ஒன்றில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் அதிவேகத்தில் சுற்றிவரவேண்டும்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சாகசச் செயலில் இரண்டு மோட்டார்சைக்கிள் சாகச வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இணையத்தில் பரவலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்ட காணொளிகளில் இரண்டு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களும் கூண்டில் சுற்றிவந்ததையும் அதிவிரைவில் ஒருவரையொருவர் கடந்துசென்றதையும் காணமுடிந்தது.

இருப்பினும் சில முறை சுற்றிவந்தபின், ஓட்டுநர்களில் ஒருவர் தனது பிடியை இழந்து கீழே விழுந்தார். அவரது மோட்டார்சைக்கிள் தீப்பிடித்துக்கொண்டது. மற்றோர் ஓட்டுநர் நெருப்பைத் தவிர்ப்பதற்குத் தொடர்ந்து கூண்டில் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தார்.

பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் சிலர் உதவிக்கு அழைப்பு விடுத்ததாகவும் உள்ளூர் செய்தி நிறுவனமான ‘சோஹூ நியூஸ்’ கூறியது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், ‘ஹேப்பி வேலி’ கேளிக்கைப் பூங்காவில் அந்த சாகசச் செயல் மீண்டும் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்