மலேசியாவின் ஃபயர்ஃபிளை விமானச் சேவை, சிங்கப்பூர், கூச்சிங், சரவாக் ஆகிய இடங்களுக்கு சிலாங்கூரில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திலிருந்து (சுபாங் ஸ்கைபார்க்) இரு புதிய நேரடிச் சேவைகளை வழங்கவுள்ளது.
இந்தப் புதிய வழித்தடங்கள் மார்ச் 24 முதல் வாரந்தோறும் ஆறு முறை வரை செயல்படும். மார்ச் 30 முதல் வாரந்தோறும் ஏழு சேவைகளாக உயர்த்தப்படும்.
மலிவுக் கட்டண மலேசிய விமானச் சேவை நிறுவனமான ஃபயர்ஃபிளையின் போயிங் 737-800 ரக விமானங்கள் இந்தச் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும். அவை 200 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடியவை.
புதிய அறிமுகத்தையொட்டி, விமான நிறுவனம் சிறப்புக் கட்டணங்களை அறிவித்துள்ளது. சிறப்புக் கட்டணத்தில் பிப்ரவரி 28 வரை விமான டிக்கெட்டுகளை வாங்கலாம்.