தாய்லாந்து: வெளியேறும் விமானப் பயணிகளுக்கு விரைவில் கூடுதல் வரி

1 mins read
9b9e01d7-dee5-4fe9-9306-edba3b5344cf
தாய்லாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஆறு அனைத்துலக விமான நிலையங்களிலிருந்து வெளியேறும் பயணிகளிடம் கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேங்காக்: தாய்லாந்து, அடுத்த ஆண்டிலிருந்து (2026) அதன் அனைத்துலக விமான நிலையங்களிலிருந்து வெளியேறும் பயணிகளுக்குக் கூடுதல் வரி விதிக்கவிருக்கிறது.

தாய்லாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், ஆறு அனைத்துலக விமான நிலையங்களிலிருந்து வெளியேறும் பயணிகளிடம் கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. துணைப் பிரதமரும் போக்குவரத்து அமைச்சருமான திரு பீப்பாட் ரட்சகிட்பிராக்கார்ன் அதனைத் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஒவ்வொரு பயணிக்கும் சேவைக் கட்டணம் 730 பாட்டிலிருந்து (S$29.63) 1,120 பாட்டுக்கு (S$45.47) உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு விமான நிலையங்களின் வழியாக ஆண்டுதோறும் சராசரியாக 35 மில்லியன் பயணிகள் சென்றுவருவதாகத் தாய்லாந்து விமான நிலையங்கள் ஆணையம் கணித்துள்ளது. சேவைக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாகக் கிட்டத்தட்ட 10 பில்லியன் பாட் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

விமான நிலையச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அந்தக் கூடுதல் வருவாயைப் பயன்படுத்தத் திட்டமிடுகிறது தாய்லாந்து. சுவர்ணபூமி விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. அங்குப் புதிய முனையம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்