வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தளங்கள் கனடிய அரசாங்க இணையத்தளத்தை ஊடுருவ முயன்றதாக ஏஐ ஆய்வு நிறுவனம் ஒன்று புதன்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தது.
அந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தங்களின் முறைகள் ஊடுருவப்பட்டதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று கனடா கூறியுள்ளது.
முன்னதாக ஓப்பன்ஏஐ ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டதாகக் கூறப்படும் செயல்பாடுகளைப் போல் தெரியும் ஒரே வகையான செயல்பாடுகள், சம்பந்தப்பட்ட ஏஐ தளங்களிடையே காணப்பட்டதாக டிரான்ஸ்லூஸ் ஏஐ ஆய்வு நிறுவனம் சொன்னது. ஆனால், இதற்கு ஓப்பன்ஏஐ தளங்கள்தான் காரணம் என்று திட்டவட்டமாகக் கூற முடியாது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.
சம்பந்தப்பட்ட ஏஐ தளங்கள் கனடாவின் தேசிய ஆவண, நூலக இணையத்தளத்தைக் கடந்த மே மாதம் 28, ஜூன் மாதம் 9ஆம் தேதிகளில் ஊடுருவ முயன்றதாக டிரான்ஸ்லூஸ், வலைப்பதிவு ஒன்றில் தெரிவித்தது. இதுபற்றி கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 28) தாங்கள் கனடிய அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியதாகவும் அந்நிறுவனம் கூறியது.
“இந்த முயற்சிகளுக்கு ஓப்பன்ஏஐ தளங்கள்தான் காரணம் என்று எங்களால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், சம்பந்தப்பட்ட தளங்களின் செயல்பாடுகள், முன்பு இதே அவகாசத்தில் ஓப்பன்ஏஐ தளங்கள் ஈடுபட்ட செயல்பாடுகளைப் போல் தென்படுகின்றன,” என்று டிரான்ஸ்லூஸ் விவரித்தது. தங்களின் தளங்கள் கனடிய அரசாங்க இணையத்தளங்களிலிருந்து பொதுப்படையாக இருக்கும் தகவல்களை ‘எடுக்க’ முயன்றதாகக் கூறப்படுவதைத் தாங்கள் அறிவதாக ஓப்பன்ஏஐ தெரிவித்தது.
இதுகுறித்து சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களைத் தாங்கள் பரிசீலிப்பதாகவும் அரசாங்கத் தரப்பில் பரிசீலிக்கும் அந்நாட்டு அதிகாரிகளிடம் முதற்கட்டச் சந்திப்பை நடத்தியுள்ளதாகவும் ஓப்பன்ஏஐ கூறியது.
