பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று காற்று மாசடைந்துள்ளது.
காற்றின் தரத்தை மேம்படுத்த சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குப் பாதகமான வானிலையும் உற்பத்தித்துறை நடவடிக்கைகளும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
சீன நேரப்படி காலை 11.24 மணி நிலவரப்படி சீனாவின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 282ஆகப் பதிவானது.
மே 23ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ஆக அதிகம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளியிட்ட காற்று மாசடைதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எளிதில் பாதிப்படையக்கூடிய குடியிருப்பாளர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சீன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

