அமெரிக்காவில் மூன்றாவது நாளாகத் தொடர்ந்த விமானப் போக்குவரத்துப் பாதிப்பு

அமெரிக்காவில் மூன்றாவது நாளாகத் தொடர்ந்த விமானப் போக்குவரத்துப் பாதிப்பு

10,000க்கும் மேற்பட்ட சேவைகள் முடக்கம்
படம்: ஏஎஃப்பி

16 Nov 2026 - 10:57 am

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துப் பாதிப்பு மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. 10,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) பாதிக்கப்பட்டன.

அவற்றில் 2,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; ஏறக்குறைய 7,700 விமானங்கள் தாமதமாயின. முன்னதாக, நவம்பர் 14ஆம் தேதி 6,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; 8,000க்கும் மேற்பட்ட சேவைகள் தாமதமாயின.

திங்கட்கிழமை (நவம்பர் 16) விமானப் போக்குவரத்து முழுமையாக இயல்புநிலைக்குத் திரும்பும் என அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் ஷான் டஃபி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், இணையத் தாக்குதல் அல்லது நாசவேலைவால் விமானப் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, நவம்பர் 13ஆம் தேதி அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (எஃப்ஏஏ) நாடு தழுவிய அளவில் விமானங்களை நிறுத்திவைத்தது.

கடந்த 2001ஆம் ஆண்டுச் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட மிக நீண்ட தடையாக அது அமைந்தது.

ஆர்கன்சாஸ், டெக்சஸ் நிலையங்களில் புதிய திசைவிகள் (ரூட்டர்கள்) பொருத்தப்பட்டபோது ஏற்பட்ட தரவு நெரிசலால் தகவல்தொடர்பு அமைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் இதுபோன்ற 60 திசைவிகளின் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளதாகவும் திரு டஃபி ஞாயிற்றுக்கிழமையன்று கூறினார்.

இருப்பினும், பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

பழைய தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேம்படுத்த S$64 மில்லியன் (US$50 மில்லியன்) நிதி ஒதுக்குமாறு அமைச்சர் டஃபியும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் நாடாளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், 2025ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட US$12.5 பில்லியனில் ஏறக்குறைய US$11 பில்லியன் இன்னும் செலவிடப்படவில்லை என ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காவிமானம்இணையத் தாக்குதல்