நியூயார்க்: அமெரிக்க ராணுவத் தலைமையகத்துக்கு (பென்டகன்) எதிரான அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனத்தின் தடையாணைக் கோரிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, இந்த மின்வர்த்தக நிறுவனத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்பில் இருப்பதற்காக மட்டுமே, எந்தவொரு நிறுவனத்திற்கும் அமெரிக்க ராணுவத் தலைமையகம் ஒப்பந்தங்களை மறுக்கக்கூடாது என்று அமெரிக்க அரசாங்கத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சீனாவின் ராணுவத்திற்கு உதவுவதாகக் கூறி ‘பைடு’ தேடுபொறி நிறுவனம், ‘பிஒய்டி’ மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், பிற முக்கிய சீன உற்பத்தி, தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அலிபாபாவையும் பென்டகன் தடைப் பட்டியலில் சேர்த்ததை அடுத்து, ஜூன் மாதம் அமெரிக்க அரசு மீது அலிபாபா ஹோல்டிங்ஸ் வழக்குத் தொடுத்தது.
அந்த வழக்கில் திங்கட்கிழமை (அக்டோபர் 26) தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பின் மூலம், பென்டகன் ஒப்பந்ததாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதே அமெரிக்க விளம்பரதாரர்களின் சேவைகளை அலிபாபாவால் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தன்னை ஒரு ‘சீன ராணுவ நிறுவனம்’ என்று அமெரிக்கா வகைப்படுத்தியதை எதிர்த்துப் போராடும் அலிபாபாவின் முயற்சிகளுக்கு இருந்த ஒரு தடையையும் இந்தத் தீர்ப்பு நீக்குகிறது. 2027ஆம் ஆண்டு முதல் மூன்றாம் தரப்புகள் மூலமாக அவற்றின் தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்குவதையும் தடுக்கிறது.
