அமேசான் ‘கிளவுட்’ பிரிவுக்கு உலகளவில் தடங்கல்; பல இணையத்தளங்கள், செயலிகள் முடக்கம்

1 mins read
8af5dd1c-7dc5-4b3d-8090-c111d685f0c4
அமேசான் சேவைகளுடன், ‘கேன்வா’ போன்ற இதர செயலிகளின் செயல்பாட்டுக்குச் சிங்கப்பூரில் தடங்கல் ஏற்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

அமேசானின் ‘கிளவுட்’ சேவைகள் பிரிவான ‘ஏடபிள்யூஎஸ்’, திங்கட்கிழமை (அக்டோபர் 20) முடங்கியது. இதனால், உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு இணையத் தொடர்பு தடைபட்டது. ‘ஃபோர்ட்நைட்’, ‘ஸ்னேப்சாட்’ உட்பட பல பிரபல இணையத்தளங்களும் செயலிகளும் பாதிக்கப்பட்டன.

நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் தனிநபர்களுக்கும் தேவைக்கேற்ப கணினியியல் ஆற்றல், தரவுச் சேமிப்பு, இதர மின்னிலக்கச் சேவைகளை ஏடபிள்யூஎஸ் வழங்குகிறது.

இதன் சேவையகங்களில் ஏற்படும் இடையூறு, இதன் மேகக் கட்டமைப்பைச் சார்ந்துள்ள இணையப்பக்கங்களிலும் தளங்களிலும் சேவைத் தடையை ஏற்படுத்தும். கூகல், மைக்ரோசாஃப்ட்டின் கிளவுட் சேவைகளுடன் ஏடபிள்யூஎஸ் போட்டியிடுகிறது.

இணையச் சேவைத் தடையைக் கண்காணிக்கும் டௌன்டிடெக்டரின் தகவலின்படி, அமேசானின் ‘பிரைம்வீடியோ’, ‘அலெக்ஸா’ தளங்களும் தடங்கல்களை எதிர்கொண்டன.

டௌன்டிடெக்டரில் மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பின்போது, அமேசான் சேவைகளுடன், ‘கேன்வா’ போன்ற பிற பிரபல செயலிகளின் செயல்பாட்டுக்குச் சிங்கப்பூரில் தடங்கல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்