சீன இந்திய நல்லுறவை அமெரிக்கா கெடுக்கப் பார்க்கிறது: சீனா குற்றச்சாட்டு

1 mins read
fac027bb-7c48-458d-9f52-cb03f7ae267e
சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: இந்தியாவுடன் மேம்பட்டுவரும் சீனாவின் நல்லுறவை, அமெரிக்கா கெடுக்கப்பார்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் வியாழக்கிழமை (டிசம்பர் 25) தலைநகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவுடன் உள்ள எல்லைப் பிரச்சினையில் சீனா அண்மையில் பதற்றத்தைக் குறைத்துள்ளது. அமெரிக்கா, இந்தியா இருநாடுகளுக்கு இடையிலான உறவு ஆழம் ஆகாமல் இருக்க சீனா அவ்வாறு செய்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு திரு லின் அமெரிக்காவைச் சாடும் வகையில் அவ்வாறு பதிலளித்துள்ளார்.

“இந்தியாவுடன் உறவுகள் உத்திப்பூர்வமானது, நீண்டகால அடிப்படையில் பார்க்கப்படுவது. எனவே, இருநாட்டு எல்லை முரண்பாடுகளில் வேறு எந்த நாடும் தீர்ப்பு வழங்குவதை நாங்கள் நிராகரிக்கிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“அமெரிக்கா - இந்தியா உறவுகள் வலுவடைவதைத் தடுப்பதற்காக இந்தியாவுடன் உள்ள எல்லைப் பிரச்சினைகளை சீனா குறைத்துக்கொண்டுள்ளது,” என்று கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) அமெரிக்கத் தற்காப்பு அலுவலகம் (பென்டகன்) அறிக்கையொன்றை வெளியிட்டது.

அதனையொட்டி செய்தியாளர் கூட்டத்தில் சீனாவிடம் அந்தக் கேள்வி வைக்கப்பட்டது. அப்போது சீனாவின் தேசிய தற்காப்பு கொள்கைகளையும் அமெரிக்கா திசைதிருப்பப் பார்க்கிறது என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்