தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலைகள் நிறைந்த ஆற்றில் இளைஞனின் 12 மணிநேரப் போராட்டம்

1 mins read
bb4ef3db-0830-40bf-8be6-aac7d21a7b55
மீன் பிடிப்பதற்காகச் சென்ற ஆடவர் ஆற்றில் விழுந்துவிட்டார். - படம்: பிக்சாபே

சிபு: மீன் பிடிப்பதற்காகச் சென்ற ஓர் ஆடவர், முதலைகள் நிறைந்த ஆற்றுநீரில் வழுக்கி விழுந்ததை அடுத்து 12 மணிநேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ராஜாங் ஆற்றில் 29 வயது டேவிட்சன் மிஸ்கொல் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது நீரில் விழுந்துவிட்டார்.

அவர் விழுந்த இடத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் வழிப்போக்கர்கள் சிலரது கண்ணில் பட்டார்.

ஆடவர் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் தம் கால்களைக் கழுவ முயற்சி செய்தபோது ஆற்றில் விழுந்ததாக சிபு பகுதியின் தீயணைப்பு, மீட்புப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.

“நல்லவேளையாக அவரிடம் தோள்பை இருந்ததால் மிதந்தவாறு ஆற்றின் பலமான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார்,” என்றார் அவர்.

வலுவான நீரோட்டம் காரணமாக அவரால் ஆற்றங்கரைக்கு நீந்த முடியவில்லை என்றும் 12 மணிநேரம் அப்படியே நீரில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே பொதுமக்கள் சிலரை நோக்கி ஆடவர் கையசைத்து உதவி கோரி அழைத்ததாக அதிகாரி குறிப்பிட்டார்.

தங்களுக்கு நவம்பர் 5ஆம் தேதி அதிகாலை 3.11 மணிக்கு இதுதொடர்பாக அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று தீயணைப்பு வீரர்கள் ஒரு படகில் சென்று இளையரை 4.13 மணிக்கு வெற்றிகரமாக மீட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்