இந்துக் கோயில் நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அன்வாரிடம் திட்டப் பரிந்துரை

நிலப் பிரச்சினையை எதிர்கொள்ளும் கோயில்மீது நடவடிக்கை எடுக்க ஆறு மாத காலத் தடைக்குக் கோரிக்கை

இந்துக் கோயில் நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அன்வாரிடம் திட்டப் பரிந்துரை

1 mins read
86cfc177-68f8-4bd5-9fb2-29d2e675580b
பாதிக்கப்பட்ட கோயில்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுப்பதற்கு, குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அல்லது நிலையான தீர்வு எட்டப்படும்வரை, தற்காலிகத் தடை விதிக்க வேண்டுமென தேசிய இந்து ஆலயங்கள் வழிகாட்டிக் குழு (என்எச்டிஎஸ்சி) கோரியுள்ளது. - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவிலுள்ள இந்துக் கோயில்கள் எதிர்கொள்ளும் நீண்டகால நிலப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில், தேசிய இந்துக் கோயில்கள் வழிகாட்டிக் குழு (என்எச்டிஎஸ்சி), முறைப்படுத்தப்பட்ட திட்டத்துக்கான பரிந்துரையைப் பிரதமர் அலுவலகத்திடம் வழங்கியுள்ளது.

பிரதமரின் அரசியல் செயலாளர் சான் மின் காயிடம் பரிந்துரையை நேரில் வழங்கியதாக வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வெளியிட்ட அறிக்கையில் குழு தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட கோயில்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுப்பதற்கு, குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அல்லது நிலையான தீர்வு எட்டப்படும்வரை தற்காலிகத் தடை விதிக்க வேண்டுமென அந்தப் பரிந்துரையில் கோரப்பட்டுள்ளது.

மேலும், அத்தகைய கோயில்களைக் குறிக்க ‘பதிவு செய்யப்படாத நிலத்திலுள்ள ஆலயங்கள்’ என்ற நிர்வாகப் பெயரைப் பயன்படுத்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.

அரசாங்கத்துடன் மாநில அதிகாரிகளுடனும் இணைந்து நில விவகாரங்களைச் சட்டபூர்வமாக அணுக, தேசிய அளவிலான ஒருங்கிணைப்புத் தளமாக இந்துக் கோயில்கள் வழிகாட்டிக் குழுவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, இந்துச் சமூகத்தின் கவலைகளைப் பிரதமர் அலுவலகம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்த சான் மிங் காய், பரிந்துரைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் என்று அறிக்கை கூறியது.

நாட்டின் சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்