அன்வாரின் அன்பான திருமணநாள் பதிவு

அன்வாரின் அன்பான திருமணநாள் பதிவு

1 mins read
27d9dd2a-0946-4feb-bc84-7a5a8523dde6
அன்வார் தம்பதியரின் அன்றைய, இன்றைய படங்கள். - படம்: அன்வார் இப்ராஹிம்/ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: தங்களது 46வது திருமணநாளை முன்னிட்டு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், தம் துணைவியார் டாக்டர் வான் அசிசாவுக்கு ஃபேஸ்புக் பதிவு மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த கால, தற்போதைய புகைப்படங்களுடன், “நமது 46வது திருமண நாள் வாழ்த்துகள்,” என்று திரு அன்வார் பதிவிட்டுள்ளார்.

திருமண வாழ்வில் தம் துணைவியார் காட்டிய அன்பு, தியாகங்களுக்காகவும் அசைக்க முடியாத பிரார்த்தனைகளுக்காகவும் அவருக்கு நன்றிதெரிவித்துக்கொள்வதாகத் திரு அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்ச்சியிலும் துயரத்திலும் தம்பக்கம் உறுதுணையாக நின்ற திருவாட்டி வான் அசிசாவை ‘தம் வாழ்வின் அன்பு’ என்று அவர் வருணித்துள்ளார்.

1980ஆம் ஆண்டு மணம்புரிந்த இந்த இணையர்க்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்