கடும் புயலால் ஷங்காயில் 280,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

1 mins read
111715ef-b444-40fe-9af4-16ad0bd23ce4
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கரை புரண்ட வெள்ளம். - படம்: இபிஏ

பெய்ஜிங்: சீனாவின் கிழக்குப் பகுதியை கோ-மே புயல் கன மழையுடன் நெருங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷங்ஹாய் நகரில் 280,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

புதன்கிழமை (ஜூலை 30) அதிகாலை சீனாவின் துறைமுக நகரமான சோஷானில் புயல் கரையைக் கடந்தது. மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஷங்ஹாய் நகர் உட்பட மற்ற நகரங்களிலும் விமானச் சேவைகள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஷங்ஹாய் நகரில் புயல் வீசுவது அரிது.

ஆகக் கடைசியாக 2024ஆம் ஆண்டில் பெபின்கா புயல் அந்நகரை உலுக்கியது. 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுவே ஷங்ஹாய் நகரை வாட்டி வதைத்த ஆக சக்திவாய்ந்த புயல் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்