சிறாருக்கான நீரிழிவு நோய் மருந்துக்கு அனுமதி

சிறாருக்கான நீரிழிவு நோய் மருந்துக்கு அனுமதி

1 mins read
cb892813-ebfe-4ddd-af46-e78dd82e9292
அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம், ‘டிசீல்ட்’ என்ற வகை 1 நீரிழிவு நோய்க்கான ஊசி மருந்தின் பயன்பாட்டை 8 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் விரிவுபடுத்தி அனுமதி அளித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம், சனோஃபி (Sanofi) நிறுவனத்தின் ‘டிசீல்ட்’ என்ற வகை 1 நீரிழிவு நோய்க்கான ஊசி மருந்தின் பயன்பாட்டை 8 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் விரிவுபடுத்தி அனுமதி அளித்துள்ளது. அண்மையில் வகை 1 நீரிழிவு நோயின் மூன்றாம் கட்ட பாதிப்பு கண்டறியப்பட்ட சிறுவர்களிடம், இன்சுலின் உற்பத்தியை உடல் இழப்பதைத் தாமதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த அண்மைக்கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யும் கணையச் செல்களைச் சேதப்படுத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றலின் எதிர்வினையைக் கட்டுப்படுத்தி, இன்சுலின் உற்பத்தியை நீண்ட காலத்துக்குப் பாதுகாக்கும் வகையில் இந்த மருந்து செயல்படுகிறது.

அண்மையில் வகை 1 நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட 328 சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 18 மாதங்களுக்குப் பிறகு, ‘டிசீல்ட்’ மருந்தைப் பெற்றுக்கொண்ட நோயாளிகளிடம் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களின் செயல்பாட்டுக் குறைபாடு மிகக் குறைந்த அளவே இருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்