சவூதி அரேபிய விமான நிலையத்தில் தாக்குதல்; இந்தியர் உட்பட இருவர் மரணம்

சவூதி அரேபிய விமான நிலையத்தில் தாக்குதல்; இந்தியர் உட்பட இருவர் மரணம்

படம்: ராய்ட்டர்ஸ்

22 Oct 2026 - 7:00 pm

1 mins read

ரியாத்:சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் நகரமான தம்மாமில் உள்ள மன்னர் ஃபஹத் அனைத்துலக விமான நிலையத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

இதனை அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 22) உறுதிப்படுத்தியது.

மாண்ட மற்றொருவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். ஏமனின் ஹூதிப் படை நடத்திவரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் இந்தியர்கள், ஏமன் நாட்டவர், பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள் உட்பட மேலும் எண்மர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தொடர்புகொண்டு வருவதாகவும் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

“உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது அன்பிற்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறோம்,” என்று எக்ஸ் தளம் வழியாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாகச் சவூதி விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது விமான நிலையச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டு, வான்வழிப் போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சவூதி அரேபியாவிமான நிலையம்தாக்குதல்இந்தியர்மரணம்