சிட்னி: உப்புநீர்வாழ் முதலை ஒன்று, ஆஸ்திரேலியாவின் ‘புல்லா’ சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக அச்சுறுத்தி வந்தது.
நாய்களை அந்த 3.6 மீட்டர் நீளமுடைய முதலை வேட்டையாடியதுடன் பிள்ளைகளின் மீதும் பாய்ந்தது.
மக்களுக்குச் சொந்தமான நாய்கள் பலவற்றை அது கொன்றது.
இந்நிலையில், அதன் கதையை முடித்துவிடலாம் என்று புல்லா சமூகத்தைச் சேர்ந்த பெரியோரும் நில உரிமையாளர்களும் கலந்தாலோசித்து முடிவெடுத்தனர்.
காவல்துறையினர் ஜூன் 11ஆம் தேதி அந்த முதலையைச் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து, பாரம்பரிய முறையில் ஒரு விருந்துக்காக புல்லா சமூகத்தினர் அந்த முதலையின் உடலைத் தயார்ப்படுத்தியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆண்டு முற்பாதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அந்த முதலை, இடம்பெயர்ந்து வீடுகள் உள்ள அந்தப் பகுதியில் இருந்த ஆறு ஒன்றுக்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இறுதியில், அந்த முதலை வெவ்வேறு உணவுவகைகளில் சேர்க்கப்பட்டதாக சார்ஜன்ட் மெக்பிரைட் கூறினார்.

