தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$1.4 பில்லியன் செலவில் தானியக்கக் கடலடி வாகனத்தை வாங்கும் ஆஸ்திரேலியா

1 mins read
6b498dfb-a9e1-4c3f-819e-d7fcb3f7fb8f
துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்ல்சும் (இடம்) தற்காப்புத் தொழில்துறை அமைச்சர் பேட் கான்ரோயும் மிகப் பெரிய கடலடி வாகனத்திற்கு அருகில் நிற்கின்றனர் (செப்டம்பர் 10). - படம்: ராய்ட்டர்ஸ்.

சிட்னி: ஆஸ்திரேலியா மிகப் பெரிய தானியக்கக் கடலடி வாகனத்தை உருவாக்க $1.4 பில்லியனை முதலிடவிருக்கிறது. ‘கோஸ்ட் ‌ஷார்க்’ எனும் பெயர்கொண்ட அது, நாட்டின் கடற்படை ஆற்றல்களை வலுப்படுத்தும் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது.

துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸ் புதன்கிழமை (செப்டம்பர் 10) சிட்னியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதனைத் தெரிவித்தார்.

ஏண்டுரில் ஆஸ்திரேலியா நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ் கடலடி வாகனம் உருவாக்கப்படும்.

“உலகின் ஆக உயரிய தொழில்நுட்ப ஆற்றல்கொண்ட வாகனம் இது. தானியக்கக் கடலடி ராணுவ ஆற்றல்களில் உலக அளவில் ஆஸ்திரேலியா முன்னணி வகிப்பதையே இது காட்டுகிறது,” என்றார் திரு மார்ல்ஸ்.

கோஸ்ட் ‌ஷார்க் கடலடி வாகனத்தால் வேவு, கண்காணிப்பு, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று அவர் சொன்னார்.

அடுத்த ஆண்டுத் (2026) தொடக்கத்தில் முதல் வாகனம் சேவையைத் தொடங்கும் என்று கூறிய திரு மார்ல்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அத்தகைய மேலும் பல கடலடி வாகனங்களைச் சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் எண்ணியிருப்பதாகத் தெரிவித்தார்.

வட்டாரத்தில் சீனா அதன் ராணுவ பலத்தை அதிவிரைவில் விரிவுபடுத்திவருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அதன் தற்காப்பு ஆற்றல்களை வலுப்படுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்