சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து பலர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நியூகாசல் துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் படகுகளில் இருந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கரி ஏற்றுமதிக்கு இந்தத் துறைமுகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் துறைமுகம் சிட்னி நகரிலிருந்து கிட்டத்தட்ட 170 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஆர்ப்பாட்டம் காரணமாக துறைமுகத்துக்குள் செல்ல முடியாமல் கப்பல் ஒன்று திரும்பிச் சென்றதாக துறைமுக நிர்வாகம் கூறியது.
நியூகாசல் துறைமுகத்துக்கு அருகில் உள்ள கப்பல்கள் செல்லும் பாதையிலிருந்து வெளியேற மறுத்ததற்காக நவம்பர் 24ஆம் தேதியன்று 138 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக ஏற்பட்ட இடையூறு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று துறைமுக நிர்வாகம் கூறியது.
திரும்பிச் சென்ற கப்பல் துறைமுகத்துக்குள் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக துறைமுகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கப்பல்கள் செல்லும் பாதையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்லாதபடி காவல்துறையினர் பார்த்துக்கொண்டால் நவம்பர் 24ஆம் தேதியில் துறைமுக வழக்கம்போல செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.