தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் அரிய வகை நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
நண்பகல் நேரத்தில் மக்களின் நிழல் திடீரெனக் காணாமல் போனது.
இது வியாழக்கிழமை (ஏப்ரல் 27) மதியம் 12:16 மணிக்கு நடந்தது. சூரியன் உச்சிக்கு சென்ற போது நிழல்கள் காணாமல் போயின.
செங்குத்தாக இருக்கும் பொருள்கள் அதாவது மக்கள், மரங்கள், கட்டிடங்கள், கம்பங்கள் போன்றவற்றின் நிழல்கள் சில நிமிடங்கள் காணமல் போயின.
சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்காதபோது இது நடந்தது.
உலக நாடுகள் பலவற்றில் நிழல்கள் இல்லாத தருணம் ஆண்டிற்கு இருமுறை நடக்கும்.
இவ்வாண்டு தாய்லாந்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் நிழல் இல்லா நாள் பதிவானது. அது யாலா மாநிலத்தில் நடந்தது.
மீண்டும் நிழல் இல்லா நாளை பேங்காக் மக்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி 12:22 மணிக்கு எதிர்பார்க்கலாம் என்று தாய்லாந்து வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

