தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேங்காக் விமான நிலையத்தில் மூன்றாவது பயணிகள் முனையம் திறப்பு

1 mins read
3f93e70c-338b-4f97-95fc-5d3b5264f7ff
கிட்டத்தட்ட 35 பில்லியன் பாட் (S$1.31 பில்லியன்) செலவில் மூன்றாவது முனையம் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் கட்டப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் மூன்றாவது பயணிகள் முனையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 35 பில்லியன் பாட் (S$1.31 பில்லியன்) செலவில் கட்டப்பட்ட இந்த முனையத்தின் திறப்பு விழாவில் அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொண்டார்.

சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கான விசா தள்ளுபடி திட்டத்தை இம்மாதம் 25ஆம் தேதி தாய்லாந்து அறிவித்தது.

இதனால், விடுமுறைக் காலங்களில் அந்நாட்டிலிருந்து தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணிகள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, விமான நிலையத்தில் ஏற்படும் கூட்டநெரிசலைத் தவிர்ப்பதற்காக மூன்றாவது பயணிகள் முனையம் திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்