பங்ளாதேஷில் ஊழியர்கள் போராட்டம்; சம்பள வாரியம் அமைக்கப்படும் என அறிவுப்பு

பங்ளாதேஷில் ஊழியர்கள் போராட்டம்; சம்பள வாரியம் அமைக்கப்படும் என அறிவுப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

01 Nov 2026 - 6:53 pm

1 mins read

டாக்கா: ஆடைத் துறை ஊழியர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்ய ஏதுவாக பங்ளாதேஷ் அரசு சம்பள வாரியம் ஒன்றை அமைக்கவுள்ளது. அதுகுறித்த தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) வெளியாயின.

கடந்த சில வாரங்களாகச் சம்பள உயர்வு கேட்டு பங்ளாதே‌ஷ் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால், பல ஆலைகள் மூடப்பட்டு, காவல்துறையினருடன் மோதல் மூண்டது. அதையடுத்து, ஊதிய மறுஆய்வு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு, வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவச் செலவுகள் ஆகியவை கடுமையாக உயர்ந்துவிட்டதால், குறைந்தபட்ச மாதாந்தர ஊதியத்தை 30,000 டாக்காவாக (S$313) உயர்த்த வேண்டும் என ஆடைத்துறை ஊழியர்கள் கோருகின்றனர்.

அத்துறையில் தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் 12,500 டாக்காவாக உள்ளது.

ஏறக்குறைய நான்கு மில்லியன் தொழிலாளர்களைக் கொண்டுள்ள பங்ளாதேஷ் ஆடைத்துறை, அந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 80 விழுக்காட்டிற்கும் அதிகப் பங்கை வகிக்கிறது.

உலகின் பல முன்னணி நிறுவனங்களுக்கும் பங்ளாதே‌ஷிலிருந்து ஆடைகள் விநியோகிக்கப்படுகிறது.

போராட்டத்திற்குத் தீர்வுகாணும்நோக்கில், தொழிற்சங்கத் தலைவர்களுடனும் தொழில்துறை பேராளர்களுடனும் கலந்துபேசி, சம்பள வாரியம் அமைக்கப்படும் எனத் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் ஆரிஃபுல் ஹக் சௌத்ரி தெரிவித்தார்.

ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். நீண்டகாலம் ஆலைகள் மூடப்பட்டால் ஏற்றுமதி தாமதமாகி உற்பத்தியாளர்களும் ஊழியர்களும் நெருக்கடியை எதிர்நோக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்