படகுச் சேவைகளைக் குறைத்த பாத்தாம் படகு நிறுவனங்கள்

படகுச் சேவைகளைக் குறைத்த பாத்தாம் படகு நிறுவனங்கள்

1 mins read
4ae13a76-769a-4740-b165-b8718ee34c16
சிங்கப்பூரிலிருந்து பாத்தாம் செல்வோர் கூடுதலாக $6 கட்டணம் செலுத்தவேண்டும். - படம்: பெங்கெஸ்டு / ஃபேஸ்புக்

ஜகார்த்தா: உலக அளவில் அதிகரித்துள்ள எரிபொருள் விலையால் சிங்கப்பூருக்கான படகுச் சேவைகளைக் குறைத்துக்கொள்வதாகப் பாத்தாம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரர்களிடையே பிரபல சுற்றுலாத் தளமாக உள்ள இந்தோனீசியாவின் பாத்தாம் தீவு, ரியாவ் தீவுகளுக்கான படகுச் சேவைகளையும் குறைப்பதாகச் சொன்னது.

அப்படியிருந்தும் சிங்கப்பூரர்கள் பலர் மளிகைப் பொருள்கள் போன்றவற்றை வாங்க பாத்தாம் தீவிற்குப் படையெடுப்பதாகப் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.

பாத்தாம் நிலைய அனைத்துலகப் படகு முனையத்தில் சிங்கப்பூரின் ஹார்பர் ஃபிரண்டிற்கு வந்துசெல்லும் படகுகளின் சேவை 16லிருந்து 12க்குக் குறைக்கப்பட்டுள்ளது. தானா மேராவுக்கான சேவை ஒன்பதிலிருந்து நான்குக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் செலவுகளைச் சமாளிக்க படகுச் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்தன.

பாத்தாம் ஃபாஸ்ட் நிறுவனம் அதன் சேவைகளைக் கிட்டத்தட்ட 40 விழுக்காடு வரை குறைத்துள்ளதாகச் சொன்னது.

படகுச் சேவைகளைக் குறைத்துக்கொண்டதற்கு அப்பால் எரிபொருள் விலையைச் சமாளிக்க கட்டணங்களையும் நிறுவனங்கள் உயர்த்தின.

சிங்கப்பூரிலிருந்து செல்வோருக்கு கூடுதலாக $6யும் பாத்தாமிலிருந்து புறப்படுவோருக்குக் கூடுதலாக $4.50ம் வசூலிக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்
பாத்தாம்படகுசிங்கப்பூர்