தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பான் பேரங்காடியில் நுழைந்த கரடி; ஊழியர் காயம்

1 mins read
ecd39e6a-c7cb-4728-8398-954101dcc692
பேரங்காடியின் நுழைவாயிலில் கரடியைப் பிடிப்பதற்காக அதிகாரிகள் இரண்டு பொறிகளை வைத்துள்ளனர். - படம்: யோமியூரி ஷிம்புன்/ ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

தோக்கியோ: ஜப்பானில் அகிடா நகரத்தில் உள்ள பேரங்காடி ஒன்றில் கரடி புகுந்து ஊழியரைத் தாக்கியிருக்கிறது.

நவம்பர் 30ஆம் தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.20 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மத்திய அகிடாவின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அகிடா நகரம், மேற்கில் ஜப்பானிய கடலின் எல்லையோரத்தில் உள்ளது. இந்நகரம், இயற்கை நிலவனப்புக்குப் பெயர் போனது.

சில சமயங்களில் வனவிலங்குகளின் இந்நகரத்திற்குள் வலம் வருவது வழக்கமாகும்.

நாற்பது வயது பேரங்காடி ஊழியருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று உள்ளூர் காவல்துறை தெரிவித்தது.

ஊழியரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 11.00 மணி வரையிலும் ஒரு மீட்டர் நீளமிருந்த கரடி பேரங்காடியிலேயே இருந்தது. உள்ளூர் அதிகாரிகள் கரடியைப் பிடிக்கும் முயற்சியில் நுழைவாயிலில் இரண்டு பொறிகளை வைத்திருந்தனர்.

பேரங்காடியின் விற்பனைப் பிரிவுக்கு இட்டுச் செல்லும் பாதையில் ஊழியரை கரடி தாக்கியது. அந்த சமயத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேரங்காடியைத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்