தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகனை மிதித்துக் கொன்ற ‘யாசக’ யானை!

1 mins read
2583c7b1-b789-4cd8-bf63-ae177c8cc053
மாதிரிப்படம்: - பிக்சாபே

பேங்காக்: உணவு, பணம் யாசகம் கேட்கப் பயன்படுத்தப்பட்டு வந்த யானை, தன் பாகனையே மிதித்துக் கொன்ற சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்தது.

தனது குட்டியை தன்னிடமிருந்து பிரித்துச் சென்றதால் ஆத்திரமடைந்த யானை தன் பாகனைத் தாக்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாய்லாந்தின் வடக்கிலுள்ள நாக்கோன் சாவன் மாநிலத்தின் ஒரு சாலைப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான 17 நொடிக் காணொளி ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்த யானை தனது பெண் பாகனைத் துரத்துவதை அக்காணொளி காட்டுவதாக பட்டாயா மெயில் செய்தி தெரிவித்தது.

ஆடவர் இருவர் தரையில் கிடந்த ஒரு பெண்ணுக்கு உதவ முயல்வதும் அந்த யானையை விரட்டுவதும் காணொளியில் தெரிகிறது.

பின்னர், கீழே விழுந்து கிடந்த பெண்மணி ஜந்திரா சுவென்லாம், 35, என்பதையும் அவரே அந்த யானையின் உரிமையாளர் என்பதையும் காவல்துறை அடையாளம் கண்டது.

பெண் பாகனை மிதித்துக்கொன்ற யானை.
பெண் பாகனை மிதித்துக்கொன்ற யானை. - காணொளிப்படம்: ஃபேஸ்புக் / 3பிளஸ் நியூஸ்
குறிப்புச் சொற்கள்