தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஃபாமீது தாக்குதல் நடத்த நாள் குறித்துவிட்டோம்: நெட்டன்யாகு

1 mins read
e21341a7-f1c3-425d-814e-122a7c136b0a
கட்டடச் சிதைவுகளுக்கு இடையே விளையாடும் பாலஸ்தீனக் குழந்தை. - படம்: ஏஎஃப்பி

காஸா: ராஃபா நகரின்மீது தாக்குதல் நடத்த நாள் குறித்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பாலஸ்தீனர்கள் வசித்து வரும் அந்நகர்மீது பல வாரங்களுக்கு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று நெட்டன்யாகு அரசாங்கம் கோடிகாட்டி இருக்கிறது.

ராஃபாவிலுள்ள பயங்கரவாதப் பட்டாளங்களை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று நெட்டன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், அது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

பிணைக்கைதிகள் - சிறைக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பிலும் போர்நிறுத்தம் தொடர்பிலும் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் நெட்டன்யாகுவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலைப் பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

மீறி தாக்குதலை மேற்கொண்டால் அபாயகரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எகிப்து, பிரான்ஸ், ஜோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 9) கூட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களுக்கு மனிதநேய உதவிகள் சென்றடைய ஏதுவாக வழிகளைத் திறந்துவிடுவதற்கு இஸ்ரேலுக்கு நெருக்குதல் தரப்பட வேண்டும் என்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஸ்டெஃபான் செயோன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இஸ்ரேல்மீது பல்வேறு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் துருக்கி விதித்துள்ளது. போர்நிறுத்த அறிவிப்பு வெளியாகும்வரை அக்கட்டுப்பாடுகள் தொடரும்.

எஃகு, உரம், விமான எரிபொருள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய துருக்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்