‘டிரம்ப் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் நான் போட்டியிடுவது சந்தேகமே’

1 mins read
0aac042d-8e6d-46bd-83f7-2b7eb6bfa5a3
அமெரிக்காவின் ஜனநாயகத்துக்கு டோனல்ட் டிரம்ப் மிகவும் மிரட்டலாக விளங்குபவர் எனப் பிரசாரத்தின்போது திரு ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

மாசசூசெட்ஸ்: குடியரசுக் கட்சி அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் போட்டியிட வில்லை என்றால் தாம் தேர்தலில் போட்டியிடுவது சந்தேகம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை கூறினார்.

“நாங்கள் டிரம்ப்பை வெற்றிபெற அனுமதிக்க முடியாது. அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் நான் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது எனக்குத் தெரியவில்லை,” என பாஸ்டனுக்கு வெளியே தேர்தல் பிரசாரத்திற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் திரு பைடன் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு பைடன் கடந்த நவம்பரில் 81 வயதை எட்டினார். அமெரிக்க வரலாற்றிலேயே ஆக வயதான அதிபர் ஆவார் இவர்.

ஜனநாயகக் கட்சிக்கு உறுதியாக வாக்களிக்க விரும்பும் வாக்களர்கள் கூட அதிபரின் வயதை எண்ணி கவலை அடைந்துள்ளனர் என்பதைக் கேள்விப்பட்டதையடுத்து பைடன் இதைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்