தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிளிங்கன்: காஸாவில் அன்றாட உயிரிழப்புகள் மிக அதிகம்

1 mins read
9aedc72d-c97f-4bdc-bdf3-5dd951d91361
இஸ்‌ரேலிய தாக்குதல் நடந்த இடத்தை பாலஸ்தீனர்கள் பார்வையிட்டார்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

டெல் அவிவ்: இஸ்‌ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா சுமத்தியுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டு, ‘தகுதியற்றது’ என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஜனவரி 9ஆம் தேதியன்று தெரிவித்தார்.

இருப்பினும், போரினால் தினமும் உயிரிழக்கும் காஸா மக்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருப்பதாக அவர் சுட்டினார்.

இஸ்‌ரேலியத் தலைவர்களை டெல் அவிவில் சந்தித்துப் பேசிய திரு பிளிங்கன், அதையடுத்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

நிலவரம் மேம்படும்போது பாலஸ்தீனர்கள் முடிந்தவரை விரைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறிய திரு பிளிங்கன், ஐக்கிய நாடுகள் காஸாவில் மதிப்பீடு நடத்தும் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றையும் சுட்டினார்.

காஸாவுக்கு வெளியே உள்ள பாலஸ்தீனர்களை வேறு இடத்தில் குடியேறச் செய்யும் திட்டத்துக்குக் குரல்கொடுக்கும் திட்டங்களை அமெரிக்கா இதுவரை நிராகரித்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.

தன்னையே சீர்படுத்திக்கொள்ளும் பொறுப்பு பாலஸ்தீன அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் திரு பிளிங்கன் வலியுறுத்தினார்.

மத்தியக் கிழக்கிலுள்ள பல நாடுகளுக்கு இவ்வாரம் திரு பிளிங்கன் சென்றுவருகிறார்.

காஸாவின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்காக மத்தியக் கிழக்கு நாடுகள் பல தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் ஒரு பாலஸ்தீன மாநிலத்துக்கு இட்டுச்செல்லும் தெளிவான பாதை ஒன்று அமைக்கப்பட்டால் மட்டுமே இந்நிலை ஏற்படும்.

குறிப்புச் சொற்கள்