மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட 56 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் படகு பறிமுதல்

மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட 56 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் படகு பறிமுதல்

படம்: ஏஎஃப்பி

18 Nov 2026 - 5:42 pm

1 mins read

மேடான்: மலேசியாவிலிருந்து 56 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (’ஐஸ்’) போதைப்பொருளைக் கடத்த முயன்ற மீன்பிடிப் படகை வடக்கு சுமத்ராவின் செர்டாங் பெடாகாய் கடற்பகுதியில் மேடான் காவல்துறையினரும் சுங்கத்துறை அதிகாரிகளும் பறிமுதல் செய்துள்ளனர்.

நவம்பர் 15ஆம் தேதி, எச்சரிக்கை துப்பாக்கிச்சூட்டைப் பொருட்படுத்தாமல் தப்பிக்க முயன்ற அந்தப் படகைச் சுங்கத்துறை சுற்றுக்காவல் படகு மோதித் தடுத்து நிறுத்தியதாக மேடான் காவல்துறைத் தலைவர் ஜீன் கால்விஜன் சிமஞ்சுன்டாக் தெரிவித்தார்.

இதில் வடக்கு சுமத்ராவைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்திலிருந்து பலமுறை போதைப்பொருள் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 56 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஏறக்குறைய 280,000 இளையர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து காப்பாற்றப்பட்டதோடு, மறுவாழ்வுச் செலவில் 447.7 பில்லியன் ரூப்பியா (S$31.6 மில்லியன்) அரசுக்கு மிச்சமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்