இந்தோனீசியக் கடற்பகுதியில் மூழ்கியது படகு; குடும்பம் மாயம்

1 mins read
92bfef6f-f42b-46e6-9778-bf10d6b6f788
பாடார் தீவுக்கு அருகே கவிழ்ந்த படகில் 11 பேர் பயணம் செய்திருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியக் கடற்பகுதியில் சுற்றுப்பயணப் படகு ஒன்று மூழ்கியதை அடுத்து ஸ்பெயினைச் சேர்ந்த நால்ரைக் காணவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. 

காணாமற்போன நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 26ல் 11 பேர் பயணம் செய் அந்தப் படகு, பாடார் தீவின் நீரிணையில் மூழ்கியது. பிரபல சுற்றுப்பயணத் தளமான லபுவான் பாஜோக்கு அருகே இச்சம்பவம் நேர்ந்ததாக இந்தோனீசிய அரசு ஊடகமான அந்தாரா தெரிவித்தது.

எழுவர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் இருவரும் நான்கு படகுப் பணியாளர்களும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் அடங்குவர். 

எஞ்சியுள்ள நால்வருக்கான தேடல் டிசம்பர் 27ல் தொடர்ந்தது. 

மூன்று மீட்டர் வரை உயர்ந்தோங்கிய அலைகள் படகை மூழ்கடித்ததாக லபுவான் பாஜோ துறைமுகம் தெரிவித்தது.

வானிலை ஒத்துழைக்காததால் ஆரம்பட்ட தேடலை நடத்துவது சிரமமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 17,000 தீவுகளைக் கொண்டுள்ள இந்தோனீசியாவில் கடல் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. மோசமான வானிலையுடன் போதிய பாதுகாப்பின்மையும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்