பட்டானி பேருந்து முனையத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு

பட்டானி பேருந்து முனையத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு

1 mins read
b79f4f07-a809-4f5b-9497-cd84fbf4e6ec
ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்னதாக, முஸ்லிம் கிளர்ச்சியாளர்களால் இந்தப் பொருள் வைக்கப்பட்டிருக்கலாம் எனப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.  - படம்: ஏசியா நியூஸ் நெட்வொர்க்
Google News Preferred Icon

பட்டானி: தாய்லாந்தின் பட்டானி பேருந்து முனையத்தில் இருக்கும் பெண்கள் கழிப்பறைக்கு அருகே வெடிகுண்டு எனச் சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 5) காலை கண்டெடுக்கப்பட்டது.

பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் அந்நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் உள்ள இரு பெட்ரோல் நிலையங்களில் மூன்று வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

சந்தேகத்திற்கிடமான அந்தப் பொருள் காணப்பட்டவுடன், வெடிகுண்டைக் கண்டறிந்து, அதைப் பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்யும் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, பேருந்து முனையத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களை உடனடியாக அப்பகுதியைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட அதிகாரிகள், அந்தப் பகுதியைச் சுற்றி தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்னதாக, முஸ்லிம் கிளர்ச்சியாளர்களால் இந்தப் பொருள் வைக்கப்பட்டிருக்கலாம் எனப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

மேலும், இந்த சந்தேகத்குரிய பொருளை அப்பகுதியில் வைத்தவர் யார் என்பதைக் கண்டறிய கண்காணிப்புக் கருவியில் பதிவானக் காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்